ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
மலையாளத்தில் கடந்த 33 வருடங்களாக முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ஷாஜி கைலாஷ். மோகன்லாலை வைத்து 7 படங்களையும் மம்முட்டியை வைத்து ஆறு படங்களையும் இயக்கியுள்ளார். ஆனாலும் ஷாஜி கைலாஷின் பேவரைட் ஹீரோ என்றால் அது சுரேஷ்கோபி தான்.. அவரை வைத்து 18 படங்களை இயக்கியுள்ள ஷாஜி கைலாஷ், கடந்த சில வருடங்களாக இறங்கு முகத்தில் இருந்த போதும் தற்போது முன்புப்போல பிசியான இயக்குனராக மாறி படங்களை இயக்கி வருகிறார். இந்த நிலையில் நடிகர் சுரேஷ் கோபியை பற்றி ஷாஜி கைலாஷ் தவறாக கூறியதாக ஒரு பேட்டி ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதில் நடிகர் சுரேஷ்கோபி 'கமிஷனர்' படத்தில் நடித்த பிறகு அவருடைய நடவடிக்கைகளும் நடை உடை பாவனைகளும் மாறிவிட்டதாகவும் குறிப்பாக படத்தில் தான் நடிக்கும் கதாபாத்திரம் போன்றே நிஜத்திலும் அவர் அனைவரிடமும் நடந்து கொள்கிறார் என்றும் ஷாஜி கைலாஷ் கூறியதாக அந்த பேட்டியில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது குறித்த தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இயக்குனர் ஷாஜி கைலாஷ் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
“இப்படி ஒரு பேட்டியை நான் கொடுக்கவே இல்லை. எங்கள் இருவருக்கும் ஆழமான புரிதல் உண்டு.. நெருங்கிய நட்பு உண்டு. இதில் யாராலும் விரிசலை ஏற்படுத்த முடியாது. நான் உதவி இயக்குனராக இருந்த காலத்தில் இருந்தே சுரேஷ்கோபியை தெரியும். என்னுடைய முதல் பட ஹீரோவும் அவர்தான். அடுத்ததாக நான் இயக்கப்போகும் படத்தின் ஹீரோவும் அவர்தான். எங்களுக்குள் சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள், சலசலப்புகள் வந்தாலும் அதை நாங்களே பேசி தீர்த்துக் கொள்வோமே தவிர இப்படி பொதுவெளியில் ஒருபோதும் பேச மாட்டேன்” என்று இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ஷாஜி கைலாஷ்.